search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிக்கல்வித்துறை
    X
    பள்ளிக்கல்வித்துறை

    10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை

    10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதுவதற்கு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    தமிழகத்தில் தற்போது பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாவது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தேர்வெழுத 2.30 மணி நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதுவதற்கு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வெழுத கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது,

    இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், புதிய பாடத்திட்டத்தால் தேர்வெழுத கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இதையடுத்து, பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. 

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இனி 3 மணி நேரம் எழுத அனுமதிக்கப்படுவர். இந்த நடைமுறை நடப்பாண்டிலேயே அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×