என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 4 பேருக்கு ‘டெங்கு’ அறிகுறி
திருவாரூர்:
தமிழகம் முழுவதும் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு சார்பில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக பலர் அனுமதிக்கபட்டுள்ளனர்.
குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 60பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் திருவாரூரை சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவர்களின் தீவிர கண் காணிப்பில் மருத்துவசிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் 24 மணி நேரமும் காய்ச்சல் பிரிவில் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டுமென மாவட்ட கலெக்டர் ஆனந்த் உத்தர விட்டுள்ளார். காய்ச்சலுக்கு தேவையான அனைத்து மருந்து பொருட்களும் அரசு மருத்துவமனைகளில் இருப்பதாகவும் தெரிவித்தார்.