என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்22 Oct 2019 10:04 AM GMT (Updated: 22 Oct 2019 10:04 AM GMT)
தூத்துக்குடி அருகே கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முள்ளக்காடு:
தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கமணி நகரை சேர்ந்தவர் சண்முக ராஜ். இவரது மனைவி செல்வ சுந்தரி(வயது 50). இவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் இருந்ததால் நேற்று இரவு மாத்திரை வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.
அவர் சந்தனமாரியம்மன் கோவில் அருகே வந்த போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் செல்வசுந்தரியை கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறித்துவிட்டு தப்பியோடினர்.
இதுகுறித்து சண்முகராஜ் முத்தையாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற முத்தையாபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 13 பவுன் செயின் மர்ம நபர்களால் பறிக்கப்பட்டது. இதற்கு காரணம் முத்தையாபுரத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சிவசெந்தில் குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு ஆகியோர் பணிமாற்றம் செய்யப்பட்டதே என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்கள் பணிமாற்றம் செய்யப்பட்ட பின்பு முக்கிய அதிகாரிகள் நியமிக்கப்படாததால் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பதாக அப்பகுதி பொது மக்கள் கூறுகின்றனர்.

Next Story
×