search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    உசிலம்பட்டியில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் - 5 பேர் கைது

    உசிலம்பட்டியில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
    உசிலம்பட்டி:

    மதுரை அருகே உசிலம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் சம்பவத்தன்று பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 7 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர்.

    போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்ப முயன்றது. உடனே உஷாரான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் 7 பேர் மீதும் சந்தேகம் வலுத்தது.

    தொடர்ந்து அவர்களை சோதனையிட்டபோது ஒரே வரிசை எண் கொண்ட 29 ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கள்ள நோட்டுகளை கடத்தி வந்த கீரிப்பட்டியைச் சேர்ந்த கீர்த்திகான் (வயது 18), மதுரை தமிழ்வாணன் (18), மங்கள்ரேவைச் சேர்ந்த 3 வாலிபர்கள் என 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக போலீசார் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோது 2 பேர் தப்பிவிட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கள்ள நோட்டு எப்படி கிடைத்தது? என கைதான வாலிபர்களிடம் இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×