என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் கனமழை - எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
Byமாலை மலர்22 Oct 2019 7:59 AM GMT (Updated: 22 Oct 2019 7:59 AM GMT)
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை பணிகள் குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
வங்க கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்தம் புயல் சின்னமாக மாற வாய்ப்பு உள்ளது. அரபிக்கடலில் உருவாகி இருக்கும் புயல் சின்னம் காரணமாகவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கும் மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழக கடலோரத்தில் 26-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து பருவ மழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்க மணி, வேலுமணி, உதயகுமார், விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து இருப்பதால் செய்ய வேண்டிய முன் எச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து உள்ளதால் அங்கு செய்ய வேண்டிய முதல் கட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நிவாரணப் பணிகளை விரைந்து செய்வது குறித்து அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
தமிழகம் முழுவதும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் மிகவும் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சாலைகளில் விழும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
இவை தவிர எதிர்பாராமல் மழை வெள்ளத்தில் சிக்கி கொள்பவர்களை மீட்க தயார் நிலையில் படகுகளை வைக்கவும் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை ஊர்களில் மீட்பு பணிகளுக்கு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.
தொடர் மழையின் பயனாக தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஏரிகள்-குளங்கள், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதிகாரிகள் அந்த நீர்நிலைகளை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இவை தவிர மழைக்கால நோய்கள் தடுப்பு பற்றியும் கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

Next Story
×