search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையால் சாலைகள் மோசமாகி கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    மழையால் சாலைகள் மோசமாகி கிடப்பதை படத்தில் காணலாம்.

    முத்துப்பேட்டை 4-வது வார்டில் மழையால் சேதமான சாலைகள்- பொதுமக்கள் கடும் அவதி

    முத்துப்பேட்டை பேரூராட்சியின் 4-வது வார்டில் மழையால் சாலைகள் சேதம் அடைந்தன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சியின் 4-வது வார்டு முத்துப்பேட்டை நகரில் முக்கிய பகுதியாகும். இங்கு உள்ள சாலைகள் அணைத்து சுமார் 15 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது.

    இதில் முக்கிய சாலையாக கருதப்படும் யூனியன் ஆபீஸ் சாலை, புதுக்காளியமன் கோவில் தெரு சாலை, டாக்டர் மீரா உசேன் சாலை, திருமண மண்டபம் சாலை ஆகிய நான்கு சாலைகளுக்கும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் நாசமாகி உள்ளது.

    இதில் யூனியன் ஆபிஸ் சாலையில் ஒன்றிய அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம், பொதுப் பணித்துறை அலுவலகம், ரெயில்வே நிலையம் மற்றும் ஓட்டல் உள்பட ஏராளமான கடைகள் குடியிருப்புகள் ஆகியவை உள்ளது. இந்த வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும் அனைத்து தரப்பு மக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    அதேபோல் டாக்டர் மீரா உசேன் சாலையில் இரண்டு தனியார் மருத்துவமனைகள், ஏராளமான கடைகள், குடியிருப்புகள் ஆகியவை உள்ளது. இந்த வழியாகவும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும் அணைத்து தரப்பு மக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதி முழுவதும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாதது போல் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த சாலைகள் முழுவதும் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக கிடைகிறது. இதனால் அப்பகுதியில் மிகப்பெரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து தொற்றுநோய்கள் பரவி வருகிறது.

    இதனால் இப்பகுதி மக்கள் பேரூராட்சியின் கவனத்திற்கு எடுத்து சென்றும் எந்தவிதமான நடவடிக்கை இல்லை. இதனால் இந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×