search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு
    X
    டெங்கு

    உடன்குடியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

    மெஞ்ஞானபுரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உடன்குடி ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    உடன்குடி:

    மெஞ்ஞானபுரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உடன்குடி ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பள்ளி தலைமையாசிரியர் லிங்கேஸ்வரன் தலைமை வகித்தார். 

    பேரணியை மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் டெங்கு பாதிப்பில் இருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்வது, சுகாதாரமாக வாழ்வது குறித்து பேசினார். முன்னதாக அனைவரும் டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். பேரணி உடன்குடி தேரியூர், வைத்திலிங்கபுரம் உட்பட முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. 
     
    இதில் சித்தா மருத்துவர் ஜெகதீஷ்குமார், சமுதாய நல செவிலியர் லில்லி பாக்கியவதி, சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ் மற்றும் சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் சேதுபதி செய்திருந்தார்.
    Next Story
    ×