search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏழுசெம்பொன் கிராமத்தில் தி.மு.க. வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசிய போது எடுத்த படம்.
    X
    ஏழுசெம்பொன் கிராமத்தில் தி.மு.க. வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசிய போது எடுத்த படம்.

    தமிழகத்தில் கொலை-கொள்ளை அதிகரித்துள்ளது: மு.க.ஸ்டாலின்

    தமிழகத்தில் இன்றைக்கு கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்புதான் அதிகளவில் நடைபெறுகிறது என்று விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் நா.புகழேந்தியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஏழுசெம்பொன் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    இந்த ஏழுசெம்பொன் கிராமம் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் புகை பிடிப்பது கிடையாது. அதனால் இந்தியாவிலேயே சிறந்த கிராமமாக இது திகழ்கிறது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் தி.மு.க. மற்றும் கூட்டணி சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிட்டோம். இதில் 39 தொகுதிகளை கைப்பற்றியுள்ளோம்.

    உங்களுக்கு நான் கோரிக்கை வைக்கிறேன். இன்னும் 3 நாட்களில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் நமது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். இங்கு ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பெண்கள் கட்டுப்பாட்டுடன் அமர்ந்து எனது பேச்சை கேட்கிறார்கள். இதன் மூலம் இந்த தொகுதியில் உதயசூரியன் உதிக்கப்போவது உறுதியாகி விட்டது.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


    இங்கு வெற்றி பெறும் தி.மு.க. வேட்பாளர் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்ய ஏற்பாடு செய்வார். அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் ஐ.எஸ்.ஐ. முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இன்றைக்கு தமிழகத்தில் கொலை-கொள்ளை, கற்பழிப்புதான் அதிகளவில் நடக்கிறது. ஆனால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ சட்டம்-ஒழுங்கு அமைதியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான பொன்முடியும் உடன் சென்றார்.
    Next Story
    ×