search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை
    X
    வைகை அணை

    வைகை அணையில் தண்ணீர் திறப்பு - அணைப்பட்டி பகுதியில் நெல் நடவு பணி தீவிரம்

    வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணைப்பட்டி பகுதியில் விவசாயிகள் நெல் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    நிலக்கோட்டை:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வைகை அணையில் இருந்து கடந்த மாதம் பெரியாறு பிரதான கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள செக்காபட்டி, சிவஞானபுரம், சித்தர்கள் நத்தம், விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம், முத்துலிங்காபுரம் உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கடந்த மாதம் நெல் நாற்றுக்களை தயாராக வைத்திருந்தனர்.

    தற்போது வைகை ஆறு அருகே பெரியாறு பிரதான கால்வாயில் தண்ணீர் செல்வதால் அதனை பயன்படுத்தி விவசாயிகள் கடந்த சில நாட்களாக நெல் நாற்று நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இருப்பினும் வைகை பெரியாறு பிரதான கால்வாய் நீரை மட்டும் வைத்து நெல் சாகுபடி செய்தாலும் மழை பெய்தால்தான் நெல் சிறப்பாக வளரும் என கூறுகின்றனர்.

    பருவமழை தீவிரம் அடையும் என்பதால் அணையின் தண்ணீர் திறப்பு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்றும் இந்த வருடம் விவசாய பணிகள் விறுவிறுப்பு அடையும் என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×