search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.
    X
    அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.

    சென்னையில் 21-ந்தேதி பாம்புக்கறி சாப்பிடும் போராட்டம்- அய்யாக்கண்ணு அறிவிப்பு

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சென்னையில் வருகிற 21-ந்தேதி பாம்புக்கறி சாப்பிடும் போராட்டம் நடைபெறும் என்று அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறு, குறு விவசாயிகள் என்று இல்லாமல் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் விலை பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தடுக்க வேண்டும், காவிரி ஆற்று தண்ணீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க வேண்டும், குண்டாறு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி ஏரி- குளங்களில் தண்ணீரை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21-ந்தேதி, சென்னை சேப்பாக்கத்தில் எலிக்கறி, பாம்புக்கறி தின்றும், விவசாயிகள் மனைவிகளின் தாலியை அறுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    எனவே விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பழனிவேல், துணை தலை வர்கள் கிருஷ்ணகிரி கிருஷ்ணன், மதுரை சந்திரசேகர், புதுக்கோட்டை முருகேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×