search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பால் வியாபாரி ஒருவரிடம் நாராயணசாமி ஓட்டு கேட்ட காட்சி.
    X
    பால் வியாபாரி ஒருவரிடம் நாராயணசாமி ஓட்டு கேட்ட காட்சி.

    தொடர் தோல்வி கண்ட ரங்கசாமி அரசியலை விட்டு விலகியிருக்க வேண்டும்- நாராயணசாமி பேட்டி

    தொடர் தோல்வி கண்ட ரங்கசாமி அரசியலைவிட்டு விலகியிருக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் நாராயணசாமி வீதி, வீதியாக, வீடு, வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். சுதந்திர பொன்விழா நகரில் இன்று கொட்டும் மழையிலும் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- 

    காமராஜர் நகர் தொகுதியை முதல்- அமைச்சராக இருந்தபோது ரங்கசாமி திரும்பி பார்க்கவில்லை. 2015-ல் பெருவெள்ளம் வந்தபோதும் மத்திய அமைச்சராக இருந்த நானும், வைத்திலிங்கமும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தோம்.  ஆனால், ரங்கசாமி தொகுதி மக்களை திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஆனால், இன்று ரங்கசாமி வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கிறார். ரங்கசாமி ஒரு சந்தர்ப்பவாதி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கவர்னர் கிரண்பேடி இலவச அரிசி உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக உள்ளார். அவருக்கு ரங்கசாமி உறுதுணையாக உள்ளார். 

    புதுவை மக்களைப்பற்றி கிரண்பேடிக்கு அக்கறை இல்லாமல் இருக்கலாம். ஆனால் ரங்கசாமி அக்கறை இல்லாமல் இருக்கிறார். இத்தொகுதியில் ஓட்டு கேட்க ரங்கசாமிக்கு அக்கறை இல்லை. அவர் மக்கள் நலனுக்கு எதிர்ப்பாக செயல்படுகிறார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தும் சட்டமன்றத்திற்கு வருவதில்லை. தேர்தலுக்கு மட்டும்தான் ரங்கசாமி வெளியே வருவார். நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல், பாராளுமன்ற தேர்தல், தட்டாஞ்சாவடி தேர்தலில் ரங்கசாமியின் பிரச்சாரம் எடுபடவில்லை, எங்கள் கூட்டணிதான் வெற்றி பெற்றது. அத்துடன் ரங்கசாமி அரசியலைவிட்டு விலகியிருக்க வேண்டும். இத்தேர்தலில் வேட்பாளர் கிடைக்காமல் ஒரு வேட்பாளரை நிறுத்தி உள்ளார். தற்போதும் ஆட்சி மாற்றம் வரும் என கூறுகிறார். இத்தேர்தலிலும் ரங்கசாமியின் பிரசாரம் தோல்வி அடையும். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் வட்டார செயலாளர் வினோத் மற்றும் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
    Next Story
    ×