search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்முதல் நிலையத்தில் மழையில் நனையும் நெல்லை மூட்டைகளில் கட்டி தொழிலாளர்கள் அப்புறப்படுத்தும் காட்சி.
    X
    கொள்முதல் நிலையத்தில் மழையில் நனையும் நெல்லை மூட்டைகளில் கட்டி தொழிலாளர்கள் அப்புறப்படுத்தும் காட்சி.

    கொள்முதல் நிலையங்களில் மழையில் நனையும் நெல்- தஞ்சை விவசாயிகள் வேதனை

    கொள்முதல் நிலையங்களில் மழையில் நனையும் நெல், முளைக்கும் அபாயம் உள்ளதால் தஞ்சை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர், அக்.17-

    தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி அறுவடை முடிந்து, தற்போது சம்பா சாகுபடியை தொடங்கியுள்ளனர்.

    இதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் மேட்டூரில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் அவதியடைந்தனர். இதற்கிடையே தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சாகுபடி செய்யப்பட்ட நெல்லை, நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், விற்பனை செய்ய முடியாமல் கடந்த சில மாத காலமாக தவித்து வருகின்றனர்.தற்போது வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கி உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால், விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில், விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ள நெல்லை, சாலையில் கொட்டி வைத்துள்ளனர். நெல்லை மழையில் நனையாதபடி தார்பாய்களை வைத்து போற்றி மூடி வைத்துள் ளனர். விரைவாக நெல்லை கொள்முதல் நிலையங் களில், கொள்முதல் செய்யவில்லை யெனில், தொடர் மழையில் நனைந்து முளைக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    இது குறித்து விவசாயி சுவாமிமலை விமல்நாதன் கூறும்போது,‘‘கோடை நெல் சாகுபடி செய்கின்ற விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம், மானிய விலையில் தரமான விதைகள் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்தது. அதனால்தான், கோடை நெல் சாகுபடி செய்தோம். தற்போது அறுவடை செய்யப்பட்ட நெல், மழையில் நனைந்து, தரம் குறைந்து வருகிறது. கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் நெல் மூட்டைகள் கிடக்கின்றன. ஒரே சமயத்தில் நெல் அறுவடையாகி வந்ததால் தான் கொள்முதல் சுணக்கம் ஏற்பட்டது என அதிகாரிகள் கூறுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

    அதே சமயம், சாலைகளில் நீண்ட நாட்களாக மழையில் நெல்கள் நனைந்து கிடப் பதால், ஈரப்பதமாகும் நெல் குறைவான விலைக்குதான் போகிறது. இதனால் ஏக்கருக்கு 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்லை கொட்டி வைப்பதற்கு உலர் களம் அமைத்து கொடுக்க வேண்டும். ஈரப்பதத்தை 17 சதவீதத்தை 21 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றார்.

    Next Story
    ×