search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தஞ்சையில் அதிரடி சோதனை - அனுமதியின்றி இயக்கப்பட்ட 4 ஆட்டோக்கள் பறிமுதல்

    தஞ்சையில் சோதனையின் போது அனுமதியின்றி இயக்கப்பட்ட 4 ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர்களுக்கு தலா ரூ.1000 வரை அபராதம் விதித்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் பல்வேறு இடங்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஆட்டோக்களில் ஏற்றிச்செல்வதாகவும், முறையான ஆவணங்கள் இன்றி சரக்கு ஆட்டோக்கள் இயக்கப்படுவதாகவும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதைத்தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் நெடுஞ்செழியபாண்டியன் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பழைய பஸ்நிலையம், ராசாமிராசுதார் மருத்துவமனை, சோழன்சிலை ஆகிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எந்த விதமான ஆவணங்களும் இல்லாமல் இயக்கப்பட்ட 3 ஆட்டோ மற்றும் 1 சரக்கு ஆட்டோவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதே போல் ராசாமிராசுதார் மருத்துவமனை அருகே நடைபெற்ற வாகன சோதனையில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டி வந்த 4 ஆட்டோ டிரைவர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கபட்டது.
    Next Story
    ×