search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    கூடலூர் பகுதியில் வெங்காயம் விளைச்சல் அதிகரிப்பு

    கூடலூர் பகுதியில் வெங்காயம் விளைச்சல் அதிகரித்து உள்ளது. விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் பகுதிகளான காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, தம்மணம்பட்டி, கழுதைமேடு, சரித்திரவு, பளியன்குடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வெங்காயம் சாகுபடி செய்து உள்ளனர்.

    குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைப்பதால் பெரும்பான்மையான விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலம் வெங்காய சாகுபடி அதிகளவு செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயி வெங்கட் கூறும்போது, நான் 2 ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்து உள்ளேன். ஒரு ஏக்கருக்கு 250 கிராம் விதை தேவைப்படும்.

    நடவு செய்து நாளில் இருந்து 90 நாட்களில் வெங்காயம் எடுப்பு தொடங்கிவிடும். அந்த வகையில் தற்போது வெங்காய அறுவடை பணிகள் நடைபெற்றுவருகிறது.

    விளைச்சல் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. மேலும் சாகுபடி பரப்பளவும் அதிகரித்து உள்ளதால் 1 கிலோ வெங்காயம் ரூ.25க்கு விற்பனை ஆகிறது. கடந்த மாதம் 1 கிலோ வெங்காயம் ரூ.40ல் இருந்து ரூ.60 வரை விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது. விலை குறைவாக விற்பனை செய்வதால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இருப்பினும் தீபாவளி மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் வெங்காய விலை உயர வாய்ப்பு உள்ளது என்றார்.

    Next Story
    ×