search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை

    டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. தற்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை நாளை முதல் (17-ந்தேதி) தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று முதலே பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. தஞ்சையில் நேற்று காலை மழை பெய்தது.

    தஞ்சையில் இன்று காலை தூறலுடன் மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி, மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர். கும்பகோணத்தில் லேசாக மழை பெய்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் வல்லம், குருங்குளம், ஒரத்தநாடு நெய்வாசல் தென்பாதி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

    நாகை, மாவட்டத்தில் நேற்று முதல் பரவலாக மழை பெய்தது, நாகை, வேளாங்கண்ணி, பொய்கை நல்லூர், கீழ்வேரூர், திட்டச்சேரி, நாகூர், திருமருகல் ஆகிய இடங்களில் இன்று அதிகாலை, மழை பெய்தது.

    இதேபோல் மாவட்டத்தில் திருப்பூண்டி, தலைஞாயிறு, வேதாரண்யம், தரங்கம்பாடி, மயிலாடுதுறை ஆகிய இடங்களில் இன்று காலை மழை பெய்தது.

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. திருவாரூர் மன்னார்குடி, குடவாசல், திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் மழை பெய்தது. தற்போது பெய்து வரும் மழையால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    டெல்டா மாவட்டங்களில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வெட்டிக்காடு - 26.40

    திருக்காட்டுப்பள்ளி - 3.80

    தென்பாதி - 11.80

    திருப்பூண்டி - 29.60

    தலைஞாயிறு - 37.80

    வேதாரண்யம் - 21.80

    நாகை - 7.10.

    Next Story
    ×