search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல்
    X
    டெங்கு காய்ச்சல்

    கள்ளக்குறிச்சி பகுதியில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

    கள்ளக்குறிச்சியில் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நிலவேம்பு குடிநீர் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட வடசிறுவள்ளூரை சேர்ந்த செல்வராஜ்(வயது 49) மற்றும் 2 குழந்தைகள் உள்பட 21 பேர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி உள்பட 55 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் 21 ஆயிரம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர்.

    இதுபற்றி ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் நேரு கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையின் கீழ் மேலூர், சங்கராபுரம், கூத்தக்குடி, தியாகதுருகம் , கச்சிராயபாளையம் உள்பட 55 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. இதன் மூலம் மக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

    நிலவேம்பு குடிநீர் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. டெங்கு இருப்பதை உறுதி செய்யும் எலைசா டெஸ்ட் இங்கு எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×