search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு ரெயில்கள்
    X
    சிறப்பு ரெயில்கள்

    தீபாவளி பண்டிகை - நெல்லை, திருச்சிக்கு சிறப்பு ரெயில்கள்

    தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ரெயில்கள் இயக்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 24, 28, 29, 30-ந்தேதிகளில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    * தாம்பரம்-நெல்லை (வண்டி எண்: 82606) இடையே சுவிதா சிறப்பு ரெயில் வருகிற 24-ந் தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8.50 மணிக்கு இயக்கப்படுகிறது.

    * தாம்பரம்-திருச்சி (06025) இடையே சுவிதா சிறப்பு ரெயில் வருகிற 30-ந் தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு இயக்கப்படுகிறது.

    * நாகர்கோவில்-தாம்பரம் (82644) இடையே சுவிதா சிறப்பு ரெயில் வருகிற 29-ந் தேதி நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.55 மணிக்கு புறப்படும்.

    * நெல்லை-தாம்பரம் (82606) இடையே சுவிதா சிறப்பு ரெயில் வருகிற 28-ந் தேதி நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும்.

    இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (புதன் கிழமை) தொடங்குகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×