search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட சிவராஜ்
    X
    கொலை செய்யப்பட்ட சிவராஜ்

    திருவெண்ணைநல்லூர் அருகே செல்போன் கடை ஊழியர் அடித்துக்கொலை

    திருவெண்ணைநல்லூர் அருகே செல்போன் கடை ஊழியரை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அம்மாவாசை பாளையத்தை சேர்ந்தவர் சிவராஜ். (வயது 30). 

    சென்னையில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கடந்த சிலநாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததால் ஜோதி தனது தாய் ஊரான பெண்ணைவலம் கிராமத்துக்கு குழந்தைகளுடன் வந்து விட்டார்.

    கடந்த 11-ந் தேதி சிவராஜ் தனது மனைவியை குடும்பம் நடத்த அழைப்பதற்காக பெண்ணைவலம் கிராமத்துக்கு சென்றார். அப்போதும் தகராறு ஏற்பட்டது. உடனே ஜோதியின் தாய்மாமன்கள் ஏழுமலை, வீரமுத்து ஆகியோர் தட்டி கேட்டனர். ஆனால் சிவராஜ் சமரசம் அடையாமல் அந்த பகுதியில் நின்ற பொக்லைன் எந்திரத்தை ஏழுமலைக்கு சொந்தமானது என நினைத்து  கற்களை வீசி உடைத்தார்.

    இது பொக்லைன் எந்திரத்தின் உரிமையாளர் அப்பாஸ் என்பவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் இது தொடர்பாக ஏழுமலையிடம் தெரிவித்தார். ஆத்திரம் அடைந்த ஏழுமலை, வீரமுத்து, அப்பாஸ் ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் சிவராஜை தாக்கினர். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த 3 பேரும் அங்கிருந்து ஓடி விட்டனர். 

    படுகாயம் அடைந்த சிவராஜ் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு நிலைமை மோசமானதால் அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கும்  முன்னேற்றம் இல்லை. எனவே சிவராஜ் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை இறந்தார்.

    இதுகுறித்து சிவராஜின் உறவினர் பிரபாகர் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி இதுதொடர்பாக ஏழுமலை உள்பட 3 பேர் மீது கொலை வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×