search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி - சீன அதிபர்
    X
    பிரதமர் மோடி - சீன அதிபர்

    சீன அதிபருடன் பேச்சு மட்டுமே - புரிந்துணர்வு ஒப்பந்தம் எதுவும் கிடையாது

    பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சுமார் 5 மணி நேரம் பேசுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் இந்தியா-சீனா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    மாமல்லபுரத்தில் இன்று இரவும், நாளை பகலிலும் சந்தித்து பிரதமர் மோடியும், சீன அதிபரும் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து பேசுகிறார்கள்.

    குறிப்பாக இந்தியா-சீனா இடையே பாதுகாப்பு, எல்லைப் பிரச்சினை, வர்த்தக உறவு ஆகியவை பற்றி இரு நாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகத்தில் சமநிலை இல்லாத நிலை உள்ளது. கடந்த ஆண்டு மோடி சீனா சென்று பேச்சுவார்த்தை நடத்தியபோது இது தொடர்பாக சில வி‌ஷயங்களை வலியுறுத்தி கூறினார். இதைத் தொடர்ந்து அரிசி, சர்க்கரை உள்ளிட்ட சில பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள சீனா முன் வந்தது.

    அரிசி

    தற்போது இன்றும், நாளையும் சீன அதிபரிடம் இது தொடர்பாக பிரதமர் மோடி மேலும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதனால் இந்தியா-சீனா இடையே வர்த்தக சமநிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சுமார் 5 மணி நேரம் பேசுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. 4 தடவை அவர்கள் சந்தித்து பேச உள்ளனர். இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் செய்யப்படலாம் என்று முதலில் கூறப்பட்டது.

    ஆனால் இந்தியா-சீனா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் அதிகாரிகள் எல்லை பிரச்சினை குறித்து பேச இருக்கிறார்கள். அது தொடர்பாகவும் ஒப்பந்தம் செய்யப்பட மாட்டாது என்று தெரிய வந்துள்ளது.

    இந்தியாவும் சீனாவும் பல்வேறு துறைகளில் மேலும் நெருங்கி வருவதற்கு இந்த சந்திப்பு வழிவகுக்கும். குறிப்பாக வர்த்தக துறைகளில் பல புதிய முடிவுகள் எட்டப்படும். ஆனால் இது தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்பட மாட்டாது என்று தெரிய வந்துள்ளது.

    பொதுவாக இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேச்சு நடத்திய பிறகு அது தொடர்பான இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசிய பிறகு கூட்டறிக்கை எதுவும் வெளியிட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×