search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடி விபத்தில் இடிந்து தரைமட்டமான கட்டிடம்.
    X
    வெடி விபத்தில் இடிந்து தரைமட்டமான கட்டிடம்.

    சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து- ஒருவர் பலி

    சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் தொழிற்சாலையில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    விருதுநகர்:

    தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது.

    சிவகாசி அருகே உள்ள ஜமீன்சல்வார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் போல் பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அங்குள்ள அறையில் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் பணி நடந்தது. அப்போது வெடி மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென தீப்பொறி ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது.

    அப்போது அறையில் இருந்தவர்கள் கூக்குரலிட்டு வெளியே ஓடினர். இருப்பினும் சில தொழிலாளர்கள் தப்பிக்க முடியாமல் அறையிலேயே சிக்கினர். இந்த வெடிவிபத்தில் அந்த அறையே தரைமட்டமானது.

    தகவலறிந்த சிவகாசி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த முத்துபாண்டி (வயது 50) உடல் சிதறி இறந்து கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் உயிர்பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இதுகுறித்து சிவகாசி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் இமானுவேல்ராஜ்குமார், தாசில்தார் ரங்கநாதன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×