search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நீர்மட்டம் 116 அடியாக சரிவு

    நேற்று 116.73 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 116.24 அடியானது.
    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    கடந்த 9-ந் தேதி 24 ஆயிரத்து 169 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 18 ஆயிரத்து 672 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்து 13 ஆயிரத்து 404 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 22 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 116.73 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 116.24 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக குறைய வாய்ப்புள்ளது.

    Next Story
    ×