search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    இந்தியா, சீனா கொடிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

    சீன அதிபர் வருகையின்போது இந்தியா, சீனா கொடிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தேர்வு செய்யப்பட்ட இடங்களில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கென்று தனி ஒருங்கிணைப்பாளர்களை அரசு நியமித்துள்ளது. மேலும், அவர்களின் பணிகள் பற்றியும் சிறப்பு உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது.

    மாமல்லபுரம் அர்ஜூனன் தபசு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதை காணலாம்

    அதன் விவரம் வருமாறு:-

    கலை நிகழ்ச்சிகளின்போது இந்தியா மற்றும் சீன நாட்டு கொடிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். இந்த பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள், கலைக்குழுவின் தலைவர்களை தொடர்புகொண்டு தங்களை அறிமுகம் செய்துகொள்ள வேண்டும்.

    கலை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைக்குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே சென்றிருக்க வேண்டும். கலை நிகழ்ச்சியை முடித்துவிட்டு, முக்கிய பிரமுகர்கள் சென்ற பிறகுதான் அங்கிருந்து வெளியேற வேண்டும்.

    கலைக்குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் அடையாள அட்டையுடன் இடம் பெற்றிருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். கலை நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் கழிவறை வசதிகள், அவசரகால ஊர்தி வசதிகள் இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

    சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே 11-ந் தேதியன்று (இன்று) சீன அதிபரை வரவேற்கும் பகுதிகள் மற்றும் நேரம் ஆகிய விவரம் வருமாறு:-

    கிண்டி எம்.எஸ்.எம்.இ. அலுவலகம் (பிற்பகல் 1.35 மணி)- தென்னக பண்பாட்டு மையத்தின் தப்பாட்டம்.

    ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டல் நுழைவாயில் (பிற்பகல் 1.40) - கலை பண்பாட்டுத் துறையின் 20 நாதசுரம், 20 தவில் இசை நிகழ்ச்சி.

    ஓட்டலை விட்டு வெளியே செல்லும்போது (மாலை 4 மணி) - 20 நாதசுரம், 20 தவில் இசை நிகழ்ச்சி.

    ஓ.எம்.ஆர்.-பல்லாவரம் ரேடியல் சாலை சந்திப்பு (மாலை 4.10) - சக்ரி கல்பேசியா, பதாய், பரேடி கலை நிகழ்ச்சி.

    கானத்தூர் (மாலை 4.20) - பாக் கூமர் மற்றும் சம்பல்புரி நாட்டியம் கலை நிகழ்ச்சி.

    மாமல்லபுரம் தாஜ் ஓட்டலுக்கு போகும் வழி (மாலை 4.25) - தப்பாட்டம் கலை நிகழ்ச்சி.

    திருவிடந்தை (மாலை 4.30) - பஞ்ச வாத்தியம்.

    நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அருகே (மாலை 4.35) - தொல்லு குனிதா நடனம்.

    புலிக்குகை (மாலை 4.37 மணி) - துடும்பாட்டம்.

    மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் (மாலை 4.40) - துடும்பாட்டம்.

    ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் இருந்து வெளியே செல்லும்போது (நாளை காலை 9 மணி) - நாதஸ்வரம் 20, மேளம் 20 இசை நிகழ்ச்சி.

    ஓ.எம்.ஆர். - பல்லாவரம் ரேடியல் சாலை சந்திப்பு (காலை 9.05 மணி) - சக்ரி கல்பேசியா, பதாய், பரேடி கலை நிகழ்ச்சி.

    கானத்தூர் (காலை 9.15 மணி) - பாக் கூமர் மற்றும் சம்பல்புரி நாட்டியம் கலை நிகழ்ச்சி.

    மாமல்லபுரம் தாஜ் ஓட்டலுக்கு போகும் வழி (காலை 9.20, பிற்பகல் 12.45, பிற்பகல் ஒரு மணி) - தப்பாட்டம், ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
    Next Story
    ×