search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரம் கடற்கரை
    X
    மாமல்லபுரம் கடற்கரை

    மாமல்லபுரத்தை சுற்றியுள்ள 44 கிராமங்களில் மீன் பிடிக்க தடை

    பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி மாமல்லபுரம் சுற்று வட்டாரத்தில் உள்ள 44 மீனவ கிராமங்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி மாமல்லபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாமல்லபுரம் சுற்று வட்டாரத்தில் உள்ள கடப்பாக்கம் முதல் கொட்டிவாக்கம் வரை உள்ள 44 மீனவ கிராமங்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும் என மீன் வளத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மீன் வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஈச்சம்பாக்கம் பகுதியில் இருந்து புதுப்பட்டினம் வரையிலும் உள்ள கிராம மக்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

    மற்ற கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லலாம். ஆனால் அவர் கட்டாயம் தங்களது அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஏனென்றால் கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் கடற்படையினர் ரோந்து செல்லும்போது, எந்த பிரச்சினையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் அவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    இது தொடர்பான உத்தரவுகள் முழுவதும் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் மூலம் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    அர்ஜுனன் தபசு பகுதியில் சீன பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி

    இதற்கிடையே வெளியுறத்துறை அதிகாரிகள், சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் சீன அதிகாரிகள் உள்ளிட்டோர் மாமல்லபுரத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் தரப்பில் மாமல்லபுரத்தில் மட்டும் கூடுதலாக 1000 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×