search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டும் - கமல்ஹாசன்

    எனது நண்பர்கள் 49 பேர் மீதான தேச துரோக வழக்கை ரத்துசெய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், எனது நண்பர்கள் 49 பேர் மீதான தேச துரோக வழக்கை ரத்துசெய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை நாடுகிறார். நாடாளுமன்றத்தில் அவர் வெளியிட்ட அறிக்கைகள் அதை உறுதிப்படுத்துகின்றன. அரசு மற்றும் அதன் சட்டம் அதை கடிதத்திலும், உணர்வுகளிலும் பின்பற்ற வேண்டாமா? எனது நண்பர்களில் 49 பேர் பிரதமரின் விருப்பத்திற்கு முரணாக தேசத் துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

    எங்கள் உச்ச நீதிமன்றம் ஜனநாயக முறைப்படி நீதியை நிலைநாட்டவும், பீகாரில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் ஒரு குடிமகனாக நான் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×