search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை
    X
    வைகை அணை

    61 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

    முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டம் 61 அடியை எட்டி உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. இதனால் அணைக்கு வரும் 37 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.20 அடியாக உள்ளது. 31 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.50 அடியாக உள்ளது. அணைக்கு 714 கன அடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 60.56 அடியாக உள்ளது. இன்று மாலைக்குள் 61 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணைக்கு 1198 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 860 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 1, மஞ்சளாறு 30, சோத்துப்பாறை 52 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×