search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாங்குநேரி தொகுதி
    X
    நாங்குநேரி தொகுதி

    நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் 44 பேர் போட்டி

    நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 44 பேர் போட்டியிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    இதேபோல், விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. உள்பட 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 44 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×