search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

    பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்கத்தின் வட்டத்தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சங்கநிர்வாகிகள் தங்கவேல், ராஜேந்திரன், கிட்டான், கலையரசி, அஷ்ரப் புன்னிஷா, ஆறுமுகம், ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் மாவட்டபொருளாளர் இளவரசன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார். மாவட்டத்தலைவர் மாயவேலு, ஆளவந்தார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வு பெறும் தினத்தன்று பழிவாங்கும் நடவடிக்கையாக தற்காலிக பணி நீக்கம்செய்து, அரசு ஊழியரை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி ஓய்வூதியத்தை நிறுத்தி வைப்பதை கைவிட வேண்டும்.

    மத்திய அரசைப்போல், மாநில அரசும் ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் மருத்துவப் படியை அனைவருக்கும் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
    Next Story
    ×