search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு ஒழிப்பு பேரணியை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார்
    X
    டெங்கு ஒழிப்பு பேரணியை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார்

    டெங்குவை ஒழிக்க 29 விழிப்புணர்வு குழு - கலெக்டர் மகேஸ்வரி தகவல்

    திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்குவை ஒழிக்க 29 விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்தார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி சார்பில் டெங்கு ஒழிப்பு பேரணியை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சீட்டை வைத்து கடைகளில் மருந்துகள் வழங்க வேண்டும். தனி நபர் விருப்பத்தின் பேரில் மருந்து மாத்திரைகளை வழங்கும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 1 மாநகராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, வருவாய்க் கோட்டாட்சியர் ரத்னா தலைமையில் 29 குழுக்கள் அமைத்து மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் தயாளன், துணை இயக்குனர் கிருஷ்ணராஜ், வட்டாட்சியர் பாண்டியராஜன், நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி, சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், ராமகிருஷ்ணன், வெயில் முத்து மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×