search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 533 கனஅடியாக சரிவு

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து மேலும் சரிந்து இன்று 8 ஆயிரத்து 533 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று 10 ஆயிரத்து 72 கனஅடியாக இருந்த நீர்வரத்து மேலும் சரிந்து இன்று 8 ஆயிரத்து 533 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 119.84 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 119.60 அடியாக இருந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறையும் பட்சத்தில் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×