search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தைப்புலி.
    X
    கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தைப்புலி.

    வால்பாறையில் சிறுத்தைப்புலி நடமாட்டம்

    வால்பாறையில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளால் உறுதியானது.
    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட பகுதியில் எருமை கன்றுக்குட்டிகள் மேய்ந்து கொண்டு இருந்தன. அவற்றை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றது. இது தொடர்பாக மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில் வால்பாறை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனவர் சபரீஸ்வரன் மேற்பார்வையில் வால்பாறை வனச்சரக மனித வனவிலங்கு மோதல் தடுப்பு வனப்பணியாளர்கள் ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் இந்த பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதா? என்பதை அறிய வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டன. அதை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். பின்னர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

    இதில், இறந்து கிடக்கும் எருமை கன்றுக்குட்டியின் உடல் அருகே சிறுத்தைப்புலி வந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனால் அந்த பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பது உறுதியானது.

    எனவே வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனவர் சபரீஸ்வரன் முன்னிலையில் மனிதவனவிலங்குமோதல் தடுப்பு வனப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சிறுத்தைப்புலியின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×