search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    விலை அதிகரிப்பு எதிரொலி - ஓட்டல்களில் வெங்காயத்தின் பயன்பாடு குறைகிறது

    விலை அதிகரிப்பு எதிரொலி காரணமாக ஓட்டல்களில் வெங்காயத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது. இந்த விலையேற்றம் இன்னும் நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    வெங்காயம் விலை நிலவரம் குறித்து சென்னை கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் நலவாழ்வு சங்கத்தின் செயலாளர் எம்.அப்துல்காதர் கூறியதாவது:-

    விளைச்சல்-வரத்து குறைந்ததின் எதிரொலியாக வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்தவகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆந்திரா வெங்காயம் ஒரு கிலோ ரூ.40-க்கும், நாசிக் வெங்காயம் (பல்லாரி) ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் இன்னும் நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளி, எலுமிச்சை உள்ளிட்டவற்றின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி ரூ.30 ஆகவும், ரூ.70 வரை விற்பனையான எலுமிச்சை ரூ.180 வரையிலும் நேற்று விற்பனை ஆனது.

    சில்லரை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் ரூ.70 முதல் ரூ.75 வரை வெங்காயம் விற்பனை ஆகிறது. வெங்காயம் மீதான விலையேற்றம் காரணமாக ஓட்டல்களில் வெங்காயத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது. குறிப்பாக ஆம்லெட்களில் வெங்காயத்தை மிளகுத்தூள் போல தூவுகிறார்கள். சில கடைகளில் ஆம்லெட்டுக்கு வெங்காயம் போடுவதே கிடையாது. அதேபோல பிரியாணிக்கு வழங்கப்படும் தயிர் பச்சடியில் வெங்காயத்தின் அளவு குறைக்கப்பட்டு முட்டை கோஸ் மற்றும் வெள்ளரி சேர்க்கப்பட்டு வருகிறது. ஓட்டல் ஊழியரின் கோப பார்வைக்கு ஆளாக நேரிடும் என்பதால் தயிர் பச்சடி மறுபடியும் கேட்பதற்கே வாடிக்கையாளர்கள் தயங்கி வருகிறார்கள். 
    Next Story
    ×