search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் சந்தீப் நந்தூரி
    X
    கலெக்டர் சந்தீப் நந்தூரி

    காந்தி ஜெயந்தி - தூத்துக்குடி மாவட்டத்தில் 2ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

    நாடு முழுவதும் வருகிற 2-ந் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறி உள்ளார்.
    தூத்துக்குடி:

    நாடு முழுவதும் வருகிற 2-ந் தேதி (புதன்கிழமை) காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உத்தரவுப்படி தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுக்கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் அனைத்தும் காந்தி ஜெயந்தி தினத்தன்று மூடப்பட வேண்டும். மேலும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுக்கூடங்களும் மூடப்பட வேண்டும்.

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தி ஜெயந்தியையொட்டி, வருகிற 2-ந்தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக்கூடாது. அன்று மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

    Next Story
    ×