search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது

    வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.10 வரை குறைந்துள்ளது. வழக்கத்தை விட விலை உயர்வு என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை மந்தமாக நடக்கிறது.
    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வெங்காயம் திடீரென விலை அதிகரித்து ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பூண்டு விலையும் அதிகரித்தது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் தற்போது வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.10 வரை குறைந்துள்ளது. எனினும் வழக்கத்தை விட விலை உயர்வு என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விற்பனை மந்தமாக நடக்கிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.45-க்கு விற்ற ஆந்திர வெங்காயம் தற்போது ரூ.35-க்கும் ரூ.55-க்கு விற்ற நாசிக் வெங்காயம் ரூ.45-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வெங்காயம் மொத்த வியாபாரி சங்க துணைத்தலைவர் ஜி.எஸ். நடராஜன் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 90 முதல் 100 லாரிகள் வரை வெங்காயம் வந்து கொண்டிருந்தது. இன்று வரத்து குறைந்தது. இதுவரை 65 லாரிகளில் மட்டுமே சரக்கு வந்துள்ளது.

    மேலும் தமிழக அரசால் கூட்டுறவு அங்காடி மூலம் நேரடியாக வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருவதால் தற்போது கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விற்பனை சற்று மந்தமாகவே உள்ளது.
    Next Story
    ×