search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பெற்ற தம்பதி ஓட்டம்

    ஆரணி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்ற தம்பதி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த சேவூர் காலனி பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற கன்றாயன். இவரது மனைவி சோலையம்மாள் 5-வது முறையாக கர்ப்பிணியானார்.

    அக்ராபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த 14-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அவரை ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் குடும்பத்தினர் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் திடீரென சோலையம்மாள், பிறந்த குழந்தையுடன் மாயமாகி விட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் உதவியாக இருந்தவர்களும் மாயமாகி விட்டனர். இது குறித்து டாக்டர்கள் குழுவினர், அக்ராபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    இதனையடுத்து மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த், எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதா நிலை வட்டார மருத்துவ அலவலர் டாக்டர் சுதா, சுகாதார அய்வாளர் ராஜா, பகுதி செவிலியர் மாலினி ஆகியோர் சேவூர் காலனி பகுதிக்கு சென்று அங்குள்ளவர்களிடம் விசாரிதனர்.

    அப்போது பிறந்த பெண் குழந்தையை சோலையம்மாள் விற்று விட்டதாக ஒரு தரப்பினர் கூறினர். ஆனால் தொடர்ந்து நடத்திய விசாரணையில் குழந்தை இறந்துவிட்டதாகவும் அதனால் புதைத்து விட்டு அனைவரும் சென்று விட்டதாக வேறு சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் அக்ராபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த் புகார் செய்தார்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்புபா வழக்குப்பதிவு செய்து குழந்தை இறந்ததா? அல்லது விற்கப்பட்டதா? என விசாரணை நடத்தி குமார் அவரது மனைவி சோலையம்மாளை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×