search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் கனமழை

    நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழையும், தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியான காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 48 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளில் கன மழை கொட்டியது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் கடற்கரை பகுதியில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளான நெல்லை, பாளை, பாபநாசம், மணிமுத்தாறு, நம்பியாறு பகுதிகளில் ஓரளவு சாரல் மழை பெய்தது.

    சிறிய மழைக்கே நெல்லையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. டவுன் பஸ் நிலையம் வர இருக்கும் பொருட்காட்சி திடலில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அங்கு பஸ் நிலையம் அமைத்தால், பயணிகள் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்படும்.

    அதுபோல டவுனில் உள்ள மாவட்ட கல்வி அலுவலக வளாகத்திலும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பகுதியான காயல் பட்டினத்தில் அதிகபட்சமாக 48 மில்லி மீட்டரும், வைப்பார் பகுதியில் 47 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. திருச்செந்தூர், குலசேகரன் பட்டினம், சூரங்குடி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக மழை இல்லாததால் அணைகளில் நீர்மட்டம் உயரவில்லை. பாபநாசம் மலைப்பகுதியில் குறைந்த அளவே மழை பெய்ததால் அணைக்கு வினாடிக்கு 571.51 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 1,262.25 கன அடி தண்ணீர் திறந்து விடப்படு கிறது.

    இதனால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 114 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று காலை 118.11 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 212 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. அணையின் நீர்மட் டம் இன்று காலை 42.40 அடியாக உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ராதாபுரம்-46, நம்பியாறு -35, மூலக்கரைப்பட்டி-13, மணிமுத்தாறு-8.6, கன்னடியன்-8, பாபநாசம்-7, அம்பை-6.4, பாளை-6.2, சேர்வலாறு-6, சேரன்மகா தேவி-5, நெல்லை-4, நாங்குநேரி-2, சிவகிரி-1.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    காயல்பட்டினம்-48, வைப்பார்-47, ஒட்டப்பிடாரம்-28, திருச் செந்தூர்-25, தூத்துக்குடி-23, சூரங்குடி-20, ஸ்ரீவைகுண் டம்-16, வேடநத்தம்-15, காடல்குடி-13, குலசேகரன் பட்டினம்-13, சாத்தான் குளம்-12, கடம்பூர்-3, விளாத்திகுளம்-3, கயத்தார் -1, கோவில்பட்டி-1. * * * நெல்லை டவுனில் உள்ள மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம். * * * நெல்லையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட இருக்கும் மாநகராட்சி பொருட்காட்சி திடலில் மழை காரணமாக தண்ணீர் சூழ்ந்து நின்ற போது எடுத்த படம்.

    Next Story
    ×