search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது - மு.க.ஸ்டாலின்

    அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு முயற்சி நடைபெறுகிறது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின்  சிஇஜி கேம்பசில் 2019-ம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில், "இந்திய - மேல்நாட்டு தத்துவப் படிப்பு" என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. 

    கீழடி அகழாய்வுகள் வெளியாகி, தொல்தமிழர்களின் - திராவிடப் பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து, பல்கலைக்குப் பொறுப்பு வகிக்கும் ஆளுநரும், உயர்கல்வித் துறையும் இந்தப் பண்பாட்டு ஆதிக்கப் பாடத்திட்டத்தை மாற்றிடவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×