search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    போலி ஆவணங்களை காட்டி ஆசிரியரிடம் ரூ.25 லட்சம் மோசடி - ஆசிரியை மீது போலீசில் புகார்

    மதுரையில் போலி ஆவணங்களை காட்டி ஆசிரியரிடம் ரூ.24½ லட்சம் மோசடி செய்ததாக பெண் ஆசிரியை மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை கூடல்புதூர் 4-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் ஜெபமாலைராஜ் (வயது52). தெற்குவாசல் தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

    இவரது மனைவி சைலா குமாரியும் ஆசிரியையாக உள்ளார். அவருடன் வேலை பார்க்கும் ஆசிரியை கரோலின் சோபனா, போலி ஆவணங்கள் மூலம் பணம் மோசடி செய்துவிட்டதாக ஆசிரியர் ஜெபமாலைராஜ் புகார் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். கோர்ட்டு உத்தரவின்பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விளாங்குடியில் வீடு கட்டுவதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் ஆசிரியை கரோலின் சோபனா பண உதவி கேட்டார். சில ஆவணங்களையும் அளித்தார். அதனை பெற்றுக்கொண்டு ரூ.13 லட்சம் கொடுத்தேன்.

    3 மாதம் கழித்து தஞ்சாவூரில் அரசு பள்ளியில் பணியாற்றும் தனது சகோதரி ஆரோக்கிய ஸ்டெல்லாவுக்கு பணம் தேவைப்படுவதாக கரோலின் சோபனா தெரிவித்தார். அப்போது ரூ.11½ லட்சம் கொடுத்தேன்.

    அதன் பின்னர் கரோலின் சோபனா கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரிய வந்தது. எனவே அவரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் தரமறுத்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×