search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

    சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    சென்னை :

    இன்று காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, மாம்பலம், அசோக்நகர், மடிப்பாக்கம், வேளச்சேரி, எழும்பூர், வேப்பேரி, அரும்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதேபோன்று வடபழனி, கோயம்பேடு, சூளைமேடு, அண்ணாசாலை, கே.கே. நகர், ராமாபுரம், போரூர், பூந்தமல்லி, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் அண்ணாநகர் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
    Next Story
    ×