search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் நடத்தும் அலுவலரான நடேசனிடம் வேட்பு மனுதாக்கல் செய்த பத்மராஜன்.
    X
    தேர்தல் நடத்தும் அலுவலரான நடேசனிடம் வேட்பு மனுதாக்கல் செய்த பத்மராஜன்.

    நாங்குநேரி தொகுதியில் போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்

    நாங்குநேரி தொகுதியில் போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    களக்காடு:

    நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. ஆனால் 10 பேர் வேட்பு மனுக்கள் வாங்கி சென்றனர்.

    வேட்பு மனுக்களை தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நாங்குநேரி தேர்தல் நடத்தும் அலுவலரான நடேசன், உதவி தேர்தல் அலுவலரும், தாசில்தாருமான ரஹ்மத் துல்லா ஆகியோரிடம் வேட்பு மனுக்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதான கட்சிகள் சார்பில் யாரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

    இந்நிலையில் வேட்புமனு தாக்கல் 2-வது நாளான இன்று தேர்தல் மன்னன் என்று அறியப்படும் சேலம் மாவட்டம் மேட்டூர் வீரக்கால் புதூரை சேர்ந்த பத்மராஜன் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தேர்தல் அலுவலரான நடேசனிடம் வேட்புமனுவை வழங்கினார். ஹோமியோபதி மருத்துவரான இவர் இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் மனு தாக்கல் செய்து போட்டியிட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

    இந்நிலையில் தற்போது நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கின்னஸ் சாதனையில் எனது பெயர் இடம்பெற வேண்டும் என்பதற்காக இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் நான் போட்டியிட்டுள்ளேன். நாங்குநேரி இடைத்தேர்தலில் இன்று நான் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளேன். இதன் மூலம் நான் 206-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன்’ என கூறினார். 


    Next Story
    ×