search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழடி அகழ்வாராய்ச்சி
    X
    கீழடி அகழ்வாராய்ச்சி

    கீழடியில் கிடைத்த தமிழ் எழுத்துகள் கி.மு. 6-ம் நூற்றாண்டை சேர்ந்தவை - ஆராய்ச்சியாளர் தகவல்

    கீழடியில் கிடைத்த தமிழ் எழுத்துகள் கி.மு.6-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 100-வது ஆண்டை முன்னிட்டு இணையதளம் மற்றும் செல்போன் செயலி அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிந்து சமவெளி நாகரீக ஆய்வாளரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சங்க கால இலக்கிய புத்தகங்களை கடைகோடியில் உள்ள தமிழர்களுக்கு சென்றடைய இந்த இணையதளம் வழிவகுக்கும். கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி மூலம் அங்கு வாழ்ந்த தமிழர்களின் பண்பாடு, சிந்து சமவெளி மக்களின் பண்பாடோடு ஒத்துப் போகிறது. நீர் வடிகால் வசதி, ஓடுகள், ‘டெரக்கோட்டா டைல்ஸ்’ உள்ளிட்டவைகள் கீழடியில் காணப்படுகின்றன. கீழடியில் இன்னும் பல்வேறு இடங்களை ஆய்வு செய்ய வேண்டியது உள்ளது.

    மேலும் வைகை ஆற்றங்கரை ஓரங்களில் 293 இடங்களை தொல்லியல் துறை அடையாளம் கண்டுள்ளது. இந்த இடங்களை ஆய்வு செய்தால் பல்வேறு வரலாறுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீழடி ஆராய்ச்சியில் கிடைத்த தமிழ் எழுத்துகள் கி.மு. 6-ம் நூற்றாண்டை சார்ந்தவை என தெரியவருகிறது. ஆனால் இவ்வாறு எழுத்துகள், எழுதவேண்டும் என்றால் தமிழ் மொழி அதற்கும் முன்னதாகவே பேச்சு வழக்கில் இருந்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×