search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    போச்சம்பள்ளி வாரச்சந்தையில் 1 கிலோ வெங்காயம் ரூ.55-க்கு விற்பனை

    வடமாநிலங்களில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் போச்சம்பள்ளி வாரச் சந்தையில் கிலோ 55 ரூபாக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
    போச்சம்பள்ளி:

    வடமாநிலங்களில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென பல மடங்கு உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை கிலோ 55 ரூபாயாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள லசல்காவோனில், இந்தியாவின் மிகப்பெரிய மொத்தவிலை வெங்காய சந்தை அமைந்துள்ளது. 

    இங்கு வெங்காயத்தின் விலை ஒரு குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்தது. இது 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விலை உயர்வாகும். தென் மாநிலங்களில் வெங்காயம் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் வெங்காயத்தின் வரத்தும் நாள் ஒன்றுக்கு 14 ஆயிரம் குவிண்டாலில் இருந்து 11 ஆயிரம் குவிண்டாலாக குறைந்திருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதனிடையே, போச்சம்பள்ளி வாரச் சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோ 55 ரூபாயாக உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதே விலை ஏற்றத்திற்கு காரணம். சில வாரங்களுக்கு முன்பு கிலோ 15 ரூபாய்க்கு விற்ற வெங்காயம், தற்போது 55 ரூபாய்க்கு விற்பனை ஆவதாகவும் போச்சம்பள்ளி மொத்த சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

    இதனால் மளிகை கடைகளில் சில்லரை விலையில் ரூபாய் 60-க்கு பொது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஒரு கிலோ வெங்காயம் வாங்குபவர்கள் அரைக்கிலோ வெங்காயம் வாங்கி செல்கின்றனர்.
    Next Story
    ×