search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் காமராஜ்
    X
    அமைச்சர் காமராஜ்

    கமல் எங்களை பற்றி விமர்சிப்பதா? அமைச்சர் காமராஜ் பாய்ச்சல்

    சுபஸ்ரீ விவகாரத்தில் அ.தி.மு.க. அரசை விமர்சனம் செய்யும் நடிகர் கமலஹாசனுக்கு அமைச்சர் காமராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயமாக வெற்றிப்பெறும். நடிகர் விஜய் தனது படத்தின் விளம்பரத்துக்காக அ.தி.மு.க.வை விமர்சித்து பேசியுள்ளார்.

    அ.தி.மு.க. அரசை விமர்சிப்பவர்கள் நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள். சுபஸ்ரீ விவகாரத்தில் அவர்களுடைய பெற்றோர்கள் ஸ்தானத்தில் இருந்து அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது. இதில் தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்.

    கமல்

    சுபஸ்ரீ விவகாரத்தில் அ.தி.மு.க. அரசை விமர்சனம் செய்யும் நடிகர் கமலஹாசனை பொறுத்த வரை கவுதமியிடமும், பெண்களிடமும் கேட்டால் தெரியும். ‘சிவப்பு ரோஜா’ கமலஹாசன் எங்களை பற்றி விமர்சனம் செய்கிறாரா? எங்களுக்கும் கேள்வி எழுப்ப தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×