
நீலகிரி மாவட்டம் குன்னூர் அளக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாடியது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இந்நிலையில் அங்குள்ள தனியார் தோட்டத்தில் நிர்மலா என்பவருக்கு சொந்தமான பங்களா உள்ளது. அங்கு 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இன்று அதிகாலை பங்களாவுக்குள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த 3 வெளிநாட்டு நாய்களை அடித்துக்கொன்றது. சத்தம்கேட்டு அங்கு தொழிலாளர்கள் ஓடி வந்தனர். அப்போது சிறுத்தை அங்கிருந்து ஓடியது.
இதைப்பார்த்து அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். பங்களாவுக்குள் புகுந்த சிறுத்தையை உடனே கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.