search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் 28 டாஸ்மாக் பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு

    திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் 28 டாஸ்மாக் பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    திண்டுக்கல்:

    தமிழக அரசு டாஸ்மாக் மூலமாக மதுபானங்களை கடந்த 2003-ம் ஆண்டு முதல் விற்பனை செய்து வருகிறது. இந்த கடைகளில் தனியார் மூலமாக பார்களும் செயல்பட்டு வருகின்றன. இவை அரசின் அனுமதிபெற்று இயங்குகின்றன.

    டாஸ்மாக் கடைகளுக்கு கீழ் இயங்கும் பார்கள் மாதந்தோறும் அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். எனினும் சில பகுதிகளில் அனுமதியின்றி பார்கள் செயல்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அவற்றை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

    இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்க கலால்துறை ஆணையர் உத்தரவிட்டார். திண்டுக்கல், பழநியில் சில மாதங்களாக கட்டணம் செலுத்தாமல் அனுமதியின்றி பார்கள் செயல்பட்டு வருவதாக தெரிய வந்தது.

    இதையடுத்து திண்டுக்கல்லில் 17 பார்கள், பழநியில் 11 பார்கள் என மொத்தம் 28 பார்கள்அனுமதியின்றி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து அந்த பார்களுக்கு மதுவிலக்கு போலீசார் உதவியுடன் கலால், டாஸ்மாக் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    Next Story
    ×