search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜவாஹிருல்லா
    X
    ஜவாஹிருல்லா

    விவசாயிகள் போராட்டத்துக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு- ஜவாஹிருல்லா பேட்டி

    விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து போராடிவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவளிக்கும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

    தாராபுரம்:

    தாராபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது-

    திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து போராடிவரும் விவசாயிகளின் போராட்டம் நியாயமானது. எனவே விவசாயிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவளிக்கும்.

    1885 -ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட தந்தி சட்டத்தை பயன்படுத்தி விவசாயிகளின் விளை நிலங்களை அபகரிப்பது, போராடும் விவசாயிகளை, ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட தந்தி சட்டத்தை பயன்படுத்தி கைது செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    தமிழகத்தில் இருக்கக் கூடிய அ.தி.மு.க. அரசும், அதை இயக்குகின்ற பாரதீய ஜனதா அரசும், விவசாயிகளின் நலனுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். அண்டை மாநிலமான தெலுங்கானாவில் யுரோனியம் சுரங்கம் அமைப்பதற்கு ஒரு போதும் விட மாட்டோம்.

    ஏனென்றால் சுரங்கம் அமைத்தால் விவசாயம் பாதிக்கப்படும். ஐதராபாத்துக்கு செல்லக்கூடிய கிருஷ்ணா நதி நீரும் பாதிக்கப்படும் என்று ஒருமித்த நிலைப்பாட்டை தெலுங்கானா அரசு, விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு எடுத்துள்ளது.

    ஆனால் தமிழ்நாட்டில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயிகளுக்கு பாதிப்பை உண்டாக்கக் கூடிய திட்டங்களை செயல்படுத்துவதில் மிகுந்த முனைப்புடன் செயல்படுகிறது.

    இந்தியாவில் பல கட்சிகள் இருப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. ஒரு கட்சி ஆட்சி முறையை வலியுறுத்தும் விதமாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலிஹ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×