search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானைகள் நடமாட்டம்
    X
    யானைகள் நடமாட்டம்

    பந்தலூர் அருகே டான்டீ பகுதியில் யானைகள் நடமாட்டம் - தொழிலாளர்கள் அச்சம்

    அய்யன்கொல்லி சாமியார் மலை உள்பட சில பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் சாலையை கடந்து டான்டீ வழியாக செல்வதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே, அய்யன் கொல்லி சாமியார் மலை, வட்டக் கொல்லி, தட்டாம்பாறை, அம்மன்காவு உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. வனப்பகுதிகளில் உள்ள யானைகள் அடிக்கடி தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அய்யன்கொல்லி சாமியார் மலை உள்பட சில பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. யானைகளை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் யானைகள் எங்கு உள்ளது என்பதை வாட்ஸ்-அப் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் முன்னெச்சரிக்கையாக வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்து கொள்கின்றனர். இதனால் மனித-விலங்கு மோதல் நடப்பது தடுக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கிராமங்களில் முகாமிட்டுள்ள யானைகள் சாலையை கடந்து டான்டீ வழியாக செல்கின்றன. இதனால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே, டான்டீ நிர்வாகமும், வனத்துறையினரும் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×