search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    3 யானைகளை திருச்சிக்கு மாற்ற வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

    காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளை திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான சந்தியா, ஜெயந்தி, இந்துமதி ஆகிய 3 யானைகளை முறையாக பரமாரிக்கவில்லை என கூறியும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பவுண்டே‌ஷன் இந்தியா என்ற அமைப்பும், வனவிலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை என்ற அமைப்பும் கடந்த 2016ம் ஆண்டு மிரட்டியது. பின்னர், அந்த யானைகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.

    தற்போது, விழுப்புரம் மாவட்டம் குறும்பரம் கிராமத்தில் வனத்துறை அனுமதி இல்லாமல் சட்டவிரோத யானைகள் முகாமை அந்த அமைப்புகள் நடத்தி வருவதாகவும், யானைகள் காட்டி வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களிடம் பெரும் தொகை நன்கொடையாக வசூலிப்பதாகவும், இந்த முகாமை மூட உத்தரவிடக் கோரி விலங்கு நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், என்சே‌ஷசாயி ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த 3 யானைகளையும் 4 வாரத்துக்குள் மீட்டு திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும்.

    இந்த மையத்தில், யானைகளுக்கு உரிய மருத்துவ வசதிகளை வழங்கி பராமரிக்கவேண்டும். யானைகளை இடமாற்றம் செய்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
    Next Story
    ×