search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வானூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதை பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது

    வானூர் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்து நைஜீரியா நாட்டை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள ஆரோவில், கோட்டக்குப்பம் பகுதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.

    இந்த விடுதிகளில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஏராளமானோர் தங்கி உள்ளனர். இந்த தங்கும் விடுதிகளில் தடை செய்யபட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யபடுவதாக சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு லியாஸ் சுதிர்,காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசன் ஆகியோர் தலைமையிலான 2 தனிப்படை போலீசார் நேற்று மாலை ஆரோவில் மற்றும் கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தீவிர சோதனை மேற் கொண்டனர்.

    அப்போது கோட்டக்குப்பம் திவான் கந்தப்பன் சாவாடியில் உள்ள அசோகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    அந்த வீட்டில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் இருந்தனர். அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அந்த வீட்டில் வாடகைக்கு இருப்பது தெரிய வந்தது.

    போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். அங்கு தடை செய்யபட்ட போதை பொருட்கள் ஏராளமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போதை பொருட்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் பல லட்சம் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதை தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த 2 பேரையும் போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்றனர். பறிமுதல் செய்யபட்ட போதை பொருட்களும் சென்னைக்கு கொண்டு செல்லபட்டது.

    Next Story
    ×