search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    குன்னூரில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    குன்னூரில் ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    குன்னூர்:

    குன்னூர் ரெயில் நிலையம் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட பல நூற்றாண்டு பழமைமிக்க ரெயில் நிலையம்.

    மேட்டுப்பாளையம் -ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்படுகிறது. இந்த மலை ரெயில் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற ஒன்றாக திகழ்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் கோட்ட ரெயில்வே ஊழியர்கள் ரெயில் தண்டவாளத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரெயில்வே ஊழியர்கள் சங்க செயலாளர் சாகுல் ஹமீது தலைமையில் ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். தற்போது மத்திய அரசின் சார்பாக ரெயில்வே துறையில் நுகர்வோர்கள் ரெயில் டிக்கெட்டை வாங்கினால் 1 ரூபாய்க்கு 47 காசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 53 காசு ரெயில்வே துறைக்கு செல்கிறது.

    தனியார் மயமாக்கினால் இந்த மானியம் பொதுமக்களுக்கோ நுகர்வோர்களுக்கோ கிடைக்காது. முழுத்தொகையும் செலுத்தி ரெயில் டிக்கெட்டை வாங்கும் நிலை ஏற்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ரெயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×