search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான 5 பெண்களை படத்தில் காணலாம்.
    X
    கைதான 5 பெண்களை படத்தில் காணலாம்.

    பேன்சி ஸ்டோரில் துணி-கவரிங் நகைகளை திருடிய 5 பெண்கள் கைது

    போச்சம்பள்ளி அருகே பேன்சி ஸ்டோரில் துணி மற்றும் கவரிங் நகைகளை நூதன முறையில் திருடிய 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா (வயது 33). இவர் அகரத்தில் பேன்சி ஸ்டோர் மற்றும் கவரிங் நகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் பேன்சி ஸ்டோருக்கு 5 பெண்கள் வந்தனர். 

    அங்கு 5 பெண்களும் கவரிங் நகைகளில் 15 செயின்களையும், பட்டுபுடவை, ரெடிமேட் ஜவுளிகள் ஆகியவை வாங்குவது போல் நடித்து எடுத்து சென்றனர். அப்போது 5 பெண்களும் கடையில் வேலை செய்யும் பெண்களிடம் திவ்யாவிடம் பணம் தருவதாக கூறிவிட்டு, அவர்கள் திவ்யாவிடம் பணம் கொடுக்காமல் நைசாக அங்கிருந்து சென்று விட்டனர்.

    பின்னர் கடையில் வேலை செய்யும் பெண்கள் திவ்யாவிடம் 5 பெண்களும் தங்கள் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுத்தனரா? என்று விசாரித்தனர். அப்போது அவர் 5 பெண்களும் தன்னிடம் பணம் எதுவும் தரவில்லை என்று கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த திவ்யா மற்றும் கடையில் வேலை செய்யும் பெண்கள் உடனடியாக ஊர் பொதுமக்கள் உதவியுடன் 5 பெண்களை தேடினார். 

    அப்போது அகரத்தில் பஸ்சுக்காக காத்திருந்த 5 பெண்களை ஊர் பொதுமக்கள் உதவியுடன் திவ்யா கையும், களவுமாக பிடித்து நாகரசம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக  போலீசார் 5 பெண்களிடம் விசாரணை நடத்தினர். இதில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கந்திலியை அடுத்த அழகியபுதூர் சேர்ந்த கண்ணம்மா (70), கல்யாணி (36), சுஜதா(35), சீதா (35), சுமதி (39) ஆகிய 5 பேர் என்பதும், அவர்கள் திவ்யாவை ஏமாற்றி ஜவுளி மற்றும் கவரிங் நகைகளை திருடியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஜவுளி பொருட்கள் மற்றும் கவரிங் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் 5 பேரையும்  கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×